ஏற்றுமதியை மையப்படுத்திய உற்பத்தி பொரளாதார், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மையப்படுத்தியே நாம் எமது எதிர்கால பொருளாதார கொள்கைகளை உருவாக்கி செயல்பட வேண்டியுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கல்வி, சுகாதாரம், நலன்புரித்திட்டங்கள் என அனைத்தும் நவீனமயப்படுத்த வேண்டும்.
நாட்டைவிட்டு வெளியேற இளைஞர்கள் வரிசசையில் நிற்கும் யுத்தில் நாம் இருக்கிறோம். இதற்கு நாட்டை ஆட்சிசெய்ய அரசாங்கங்கள் அனைத்தும் பொறுப்புக்கூற வேண்டும்.
திருக்கோணமலை எண்ணைக்குதங்கள் அல்ல நாட்டின் வளங்கள். அவற்றை மாத்திரம் தேசிய வளங்கள் எனக் கூறி எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டனர். இன்று அவற்றில் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. அவை துறுப்பிடித்துவிட்டன.
ஆனால், நாட்டின் உண்மையான தேசிய வளம் நாட்டின் இளைஞர் யுவதிகள்;தான். அவர்களுக்கான கல்வியும் வாய்ப்புகளும் உருவாக்கிக்கொடுக்கப்படவில்லை. அதனால்தான் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
தனியார் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டைவிட்டு வெளியேற இளைஞர்கள் வரிசசையில் நிற்கும் யுத்தில் நாம் இருக்கிறோம். இதற்கு நாட்டை ஆட்சிசெய்ய அரசாங்கங்கள் அனைத்தும் பொறுப்புக்கூற வேண்டும்.
திருக்கோணமலை எண்ணைக்குதங்கள் அல்ல நாட்டின் வளங்கள். அவற்றை மாத்திரம் தேசிய வளங்கள் எனக் கூறி எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டனர். இன்று அவற்றில் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. அவை துறுப்பிடித்துவிட்டன.
ஆனால், நாட்டின் உண்மையான தேசிய வளம் நாட்டின் இளைஞர் யுவதிகள்;தான். அவர்களுக்கான கல்வியும் வாய்ப்புகளும் உருவாக்கிக்கொடுக்கப்படவில்லை. அதனால்தான் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
நீண்டகால பொருளாதார இலக்குகளை வெற்றிக்கொள்ள சமூக நல்லிணக்கம் அவசியமாகும். அடுத்தவருட ஆரம்பத்தில் அனைவருடன் கலந்துரையாடி பொது இணக்கப்பாடுகளை எட்ட எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனரஞ்சகமான தீர்மானங்களால்தான் நாட்டின் பொருளாதார பாதாளத்தில் வீழ்;ந்தது.
புதிய பொரூளாதார கொள்கைகளை நாம் உருவாக்குவது 2048ஆம் ஆண்டு நாம் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்காகும். நாம் அந்தத் தருணத்தில் இல்லாவிட்டாலும் இன்றைய இளைஞர்கள் இருப்பார்கள். அவர்களுக்காள எதிர்காலத்தையே நாம் உருவாக்குகிறோம்.
சர்வதேச நாயண நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்பாடு தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிக்கொள்வதற்காகும். ஆனால், நாம் வகுக்கும் நீண்டகால பொருளாதார இலக்குகள் நாட்டை வெற்றிக்கொள்வதற்காகும் என்றும் அவர் கூறியுள்ளார்.