‘2023 பட்ஜெட்’ பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையில் கவனம் செலுத்துகிறது ; நந்தலால் வீரசிங்க

0
117
Article Top Ad

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பொருளாதாரத்தை மீட்பது மற்றும் அதனை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பனவற்றில் கவனம் செலுத்துவதாக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வரவுசெலவுத் திட்டத்திற்குப் பின்னரான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட கலாநிதி நந்தலால் வீரசிங்க, பொருளாதார நெருக்கடியின் ஆரம்பம் முதல், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நடுத்தர மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மையை மீளப்பெற உதவும் குறுகிய கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சில கொள்கைகள் காரணமாக பொருளாதாரம் சுருங்கியதால், நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான விரைவான முடிவுகளை எடுக்க அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டது, ஏனெனில் எந்தவொரு தாமதமும் மீட்பு செயல்முறையை நீட்டிக்கக்கூடும்.

பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுக்க அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசிய கலாநிதி வீரசிங்க, அதிகரித்து வரும் பணவீக்கத்தை குறைக்க வேண்டும் என்றார்.

நெருக்கடியின் தொடக்கத்தில், நீண்ட வரிசைகள் மற்றும் நீண்ட மணிநேர மின்வெட்டு ஏற்பட்டதை நினைவு கூர்ந்த மத்திய வங்கி ஆளுநர்,
நாம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி நீண்ட கால அடிப்படையில் மீண்டு வரவில்லையென்றால், நாம் வேறு நிலைமையில் இருந்திருப்போம். எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, பொருளாதாரம் இப்போது படிப்படியாக மீண்டு, ஸ்திரத்தன்மை அடைந்து வருகிறது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) பெரும்பாலானவை இப்போது செயல்படுகின்றன. இருப்பினும் சில வணிகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதை ஒப்புக்கொண்டார்.