ஜோ பைடன் – ஷி ஜின்பிங் சந்திப்பு!

0
126
Article Top Ad

ஜி20 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று (15) ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாநாட்டிற்கு கலந்து கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையில் நேற்று (14) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அவர்கள் நேருக்கு நேர் சந்தித்தது அதுவே முதல் முறை இதுவாகும்.

இரு தரப்பினருக்கும் இடையில் பல விடயங்களில் உடன்பாடு ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பருவநிலை மாற்றம், உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை போன்ற சர்வதேச சவால்களுக்கு தீர்வு காணவும், கடன் நிவாரணம் மற்றும் சுகாதாரம் மற்றும் உலகளாவிய உணவு பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அமெரிக்காவும் சீனாவும் ஒத்துழைக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேலும் தெரிவித்துள்ளார்.