வாகன பதிவு கட்டணம் அதிகரிப்பு!

0
119
Article Top Ad

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் வாகன பதிவு கட்டணம் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான பதிவுக் கட்டணம் 3,000 ரூபாய். 1600 சிசி அல்லது 1600 சிசிக்கு குறைவான கார்களுக்கு முதல் முறை பதிவு செய்ய 25,000 ரூபாய்.

அத்துடன், 1600சிசி மற்றும் 80 கிலோவொட்களுக்கு அதிகமான கார்களுக்கு பதிவுக் கட்டணம் 40,000 ரூபாவாக செலுத்தப்பட வேண்டுமென உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு பதிவு கட்டணம் 2,000 ரூபாயும், ஆம்புலன்ஸ் மற்றும் மரணச்சடங்கு வண்டிகளின் பதிவு கட்டணம் 10,000 ரூபாயும் விசேட நோக்கத்திற்கான வாகனங்களுக்கான முதல் முறை பதிவுக் கட்டணம் 30,000 ரூபா என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருநாள் சேவையின் கீழ் வழங்கப்படும் வெளிநாட்டு பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் 15,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சாதாரண சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான கட்டணம் 1500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3,500 ரூபாயாக இருந்த கட்டணம், 5,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.