புதிய வீடுகளை வழங்குவதாக உறுதியளித்த திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி பல கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
திகோ குழுமத்தின் கீழ் இயங்கும் நிர்மாண நிறுவனம் ஒன்று பல்வேறு பகுதிகளில் நிர்மாணித்துள்ள வீட்டுத் திட்டங்களிலிருந்து வீடுகளை வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வந்துள்ளது.
இந்த மோசடியை திலினி பிரியமாலி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் வர்த்தகத்தை அந்த அமைப்புடன் தொடர்புடைய முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் ஊக்குவித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.
மேலும் திலினியின் மோசடியினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.