சபையில் கவடையடைந்த நிமல் சிறிபால டி சில்வா!

0
124
Article Top Ad

இருபது வருடங்கள் பழமையான துணிகள் சுங்கத்தில் துருப்பிடித்து வருவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சுங்கக் களஞ்சியசாலைக்கு விஜயம் செய்த போது இந்த விடயத்தை தான் பார்த்ததாகவும் அமைச்சர் கூறினார்.

இருபது வருடங்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் ஒரு வழக்கின் காரணமாக இவை சிதைவடைவதை தாம் கண்டுபிடித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் பாரியளவில் டின் மீன்கள், அரிசி மற்றும் உணவுப்பொருட்களை அழுகி வருவதாகவும் அவர் கூறினார்.

மக்கள் சிரமப்படும் போது இவை அழுகிவருவது வேதனையளிக்கிறது என கூறிய அமைச்சர், இவற்றை கால்நடை தீவனத்திற்கு பயன்படுத்த முடியாதா என கேள்வியெழுப்பினார்.

இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாதவாறு காலத்தின் தேவைக்கேற்ப சுங்க கட்டளைச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.