Article Top Ad
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் சபையில் இடம்பெற்றது.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்ததன.
அதனடிப்படையில் 37 மேலதிக வாக்குகளினால் வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளும் விமல் மற்றும் டளஸ் அணிகள் வரவு – செலவும் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தன. தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட வடக்கின் தமிழ் கட்சிகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஷ்வரன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதேவேளை, பாராளுமன்ற நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.