Article Top Ad
2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுக் கூடியது.
இதன்போதே பாதீட்டை எதிர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளும் பாதீட்டை எதிர்த்தே வாக்களிக்கவுள்ளன.