உக்ரைனின் தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக செய்துகொண்டு உடன்படிக்கையை ரஷ்யா இடைநிறுத்துவதாக ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார்.
இதனால் உலகளாவிய ரீதியில் பெரும் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்படும் என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், உக்ரைனின் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி அளிப்பதற்காக ஐ.நா. மற்றும் துருக்கியின் அனுசரணையில் வரையப்பட்ட ஒப்பந்தமொன்றில் கடந்த ஜூலை மாதம் ரஷ்யா கையெழுத்திட்டிருந்தது.
இந்த நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரீமியா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது எனவும் இதனால் ரஷ்ய தானியக் கப்பல் சேதமடைந்துள்ளது எனவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. அதனை உக்ரைன் மறுத்துள்ளது.
ரஷ்ய தானியக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டன் எதிரொலியாக உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்துவதாக அந்நாடு அறிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்கு அதிக உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஒரு நாடாக யுக்ரைன் விளங்குகிறது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பால் தானிய ஏற்றுமதி தடைப்பட்டு மீண்டும் உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த உடன் படிக்கையை பாதுகாக்க ஐ.நா. ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது