அமெரிக்க இராஜாங்க செயலரை சந்தித்த அமைச்சர் அலி சப்ரி

0
96
Article Top Ad

அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பின் போது, உள்ளூர் மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான இரு நாடுகளின் கூட்டு முயற்சிகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் 75 வருடங்களை நெருங்கியுள்ள நிலையில், பிளின்கன் தனது ட்விட்டர் கணக்கில் இலங்கையர்களின் கூட்டாண்மை மற்றும் பகிரப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளை முன்னேற்றுவதற்கான அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவது உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள பல விடயங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.