பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை!

0
122
Article Top Ad

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அரசு மற்றும் அரசாங்க உதவி பெறும் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஆலோசனையின் பின்னர் நிலவும் வானிலையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.