தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள், அதிகாரப் பகிர்வு, புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் கலந்துரையாடி புதிய தீர்மானம் எடுப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுதந்திர தினத்துக்கு முன் இன நல்லிணக்கம் தொடர்பில் தீர்வுகளை எட்ட முடியுமா என நாம் தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி எம்மிடம் கூறினார்.
13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமென நாம் கூறியதுடன் புதிய அரசியல் அமைப்பில் நிரந்தர அரசியல் தீர்வை காண வேண்டும் எனவும் நாம் வலியுறுத்தினோம்.
இன்றைய கலந்துரையாடலில் சிங்கள, முஸ்லிம் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட போதிலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரித்திருந்தது.