ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவிப்பில் இரண்டு பிழைகள் இருப்பதாக சிரேஷ்ட அரிசியல் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்தார்.
க்ளோப் தமிழ் இணையத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
ரணில் அறிவிப்பில் வடக்கு மக்களின் பிரச்சினை என்றுதான் கூறுகிறார். வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை என கூறவில்லை. வடக்கு கிழக்கை பிரிக்கவே அவர் விரும்புகிறார்.
சிங்கள பெரும் தேசியவாத அமைப்புகளும் சர்வதேச அமைப்புகளும்
இனப்பிரச்சினையை வடக்குடன் மாத்திரம் முடக்க பார்க்கின்றனர். வடக்கு
கிழக்கு எனக்கூறினால் பெருமதேசியவாதத்துடன் மோதவேண்டிவருமென எண்ணி லாவகமாக கருத்து வெளியிடுகிறார்.
அதனால்தான் தந்திரமாக வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் பேசுவோமென அவர் கூறியுள்ளார்.
இரண்டாவது விடயம் இதுவொரு தேசியபிரச்சினையென கூறிவிட்டு அனைத்து தரப்பினருடனும் பேசுகிறார். தமிழ் தேசிய பிரச்சினை என்றால் தமிழ் தரப்பினருடன்தான் அவர் பேசவேண்டும். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன்தான் இருக்கின்றனர். அவர்களுடன் ஏன் பேசவேண்டும். அனைத்து தரப்பினருக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தி காலத்தை இழுத்தடிப்பதும் அல்லது இற்குள் பிரச்சினையை முடக்குவதுமே அவரது நோக்கமாக இருக்குமெனவும் அவர் கூறியுள்ளார்.