சஜித் அணி எம்.பிக்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகள்! 

0
126
Article Top Ad
அடுத்த வருடம் ஜனவரியில் இடம்பெறப்போகும் அமைச்சரவை மாற்றத்தில் சஜித் தரப்பு எம்.பிக்கள் பல பேருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என்று கூறப்படுகின்றது.
அதேவேளை, தற்போது வெளிவிவகார அமைச்சராக இருக்கும் அலி சப்ரிக்கு நிதி அமைச்சு வழங்கப்படவுள்ளது என்று ஜனாதிபதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசமைப்பின் 21 ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சைத் தவிர வேறு எந்த அமைச்சையும் வைத்துக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில்தான் இப்போது வகித்து வரும் நிதி அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அலி சப்ரிக்கு வழங்கவுள்ளார் என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவிக்கின்றது.