சேர்ஜி அக்குவேரோ அணியில் இல்லாத நிலையிலும் உலகக்கிண்ணத்தை கையில் கொடுத்து அழகுபார்த்த ஆர்ஜென்டினா

0
135
Article Top Ad

சேர்ஜியோ குன் அக்குவேரோ ,ஆர்ஜென்டீனவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கால்ப்பந்தாட்ட வீரர் . தான் விளையாடும் காலத்தில் தேசிய அணிக்காகவும் கழக அணிகளுக்காகவும் காண்பித்த திறமைகளுக்காக உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர்.

2006ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுவரை ஆர்ஜென்டீன அணிக்காக போட்டிகளில் பங்கேற்றிருந்தார்.

எனினும் 2021ல் அவர் ஒட்டுமொத்த கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து 34 வயதிலேயே ஓய்வுபெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. . இதற்கு அவரது இதயம் தொடர்பான நோயே காரணமாக அமைந்தது.

பூரண சுகத்துடன் இருந்திருந்தால் மிக திறமையான வீரர்களில் ஒருவரும் மெஸ்ஸியின் நீண்டகால நண்பருமான அக்குவேரோ நிச்சயமாக உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்திருந்திருப்பார்.

இதய நோய்காரணமாக அவர் ஓய்வுபெற்றபோதும் ஆர்ஜென்டீன உலகக்கிண்ண அணியுடன் மைதானத்தில் அவர் இருந்த புகைப்படங்கள் இறுதிப்போட்டிக்கு முன்பாகவே வெளியாகியிருந்தன.

நேற்றையதினம் ஆர்ஜென்டீனா இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று சம்பியனானபோது மைதானத்திற்கு முதலில் ஓடிவந்த வீரர்களில் ஒருவராக அக்குவேரோ இருந்தார்.

தனது அணியடன் இணைந்து மகிழ்ச்சியில் பங்கெடுத்தார். ஆர்ஜென்டீன அணியினரும் நிர்வாகத்தினரும தமது குழாமில் இல்லாத போதும் அக்குவேரோ உலகக்கிண்ணத்தை ஏந்துவதற்கு அனுமதியளித்து அழகுபார்த்தனர்.

இறுதியில் மெஸ்ஸியை தோழில் சுமந்தவாறு அக்குவேரா மைதானத்தில் ஏனைய வீரர்களுடன் குதூலகத்தை ரசிகர்கள் முன் பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது