ஜனசக்தி இயக்கத்தின் தலைவர், கோடீஸ்வர வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலைச் சம்பவம் தொடர்பில், ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவிடம் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் சமுதித சமரவிக்ரமவால் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள் தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
சமுதித சுதந்திர ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்கவுடன் இந்த கலந்துரையாடலை நடத்திஇருந்தார்.
இந்த கொலையில் சந்தேக நபரான பிரையன் தோமன் திலினி பிரியமாலியை விட பெரிய நிதி மோசடி செய்பவர் என்று அந்த விவாதத்தில் அவர் குறிப்பிடுகிறார்.
இந்நாட்டின் பிரபல ஊடக வலையமைப்பின் உரிமையாளர் ஒருவர்தான் பிரையன் தாமஸை மேலே கொண்டு வந்ததாக குறித்த கலந்துரையாடலில் கீர்த்தி ரத்நாயக்க கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.