தினேஷ் ஷாப்டரின் மனைவி மற்றும் நண்பரிடம் விசாரணை!

0
132
Article Top Ad

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்ட தினத்திற்கு முன்னர் அவரது மனைவி டானி ஷமின் மற்றும் அவரது நண்பர் பெட்ரிக் கிறிஸ் பெரேரா ஆகியோருக்கு கையடக்கத் தொலைபேசியில் ‘லொகேஷன் டிராக்கிங்’ வசதியை வழங்கியிருந்தாரா என்பதை கண்டறிய குற்றப் புலனாய்வு திணைக்களம் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், கொழும்பு 07, மால் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து இன்னும் அரை மணித்தியாலத்தில் வீடு திரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்ற தினேஷ் ஷாப்டர், பொரளை மயானத்தில் இருந்தமை, அவரது மனைவி Tani Shamin மற்றும் Krish Perera மூலம் அடையாளம் காணப்பட்டமையாகும்.

இதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புலனாய்வாளர்கள் தினேஷ் ஷாப்டரின் கைத்தொலைபேசியை தடயவியல் விசாரணைக்காகக் கைப்பற்றியுள்ளனர் மற்றும் அவரது மனைவி மற்றும் நண்பருக்கு கடந்த காலங்களில் இந்த வசதி எத்தனை முறை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆதாரங்களை ஆய்வுசெய்யவுள்ளனர்.

தினேஷ் ஷாப்டரின் மனைவி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொரளை பொலிஸ் அதிகாரிகளினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பல தடவைகள் நீண்ட வாக்குமூலங்களை அளித்துள்ளார். என்றாலும் அவரது நண்பர் Krish Perera இன்னமும் இவ்வாறான விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.