யாழ்.மாநகர சபை முதல்வர் இராஜினாமா!

0
136
Article Top Ad

யாழ்.மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நாளை சனிக்கிழமை (31) முதல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக யாழ்.மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் 7 மேலதிக வாக்குகளால் கடந்த 21ம் திகதி தோற்கடிக்கப்பட்டது. இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காத நிலையில் மணிவண்ணன் இராஜினாமா முடிவை எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.