13ஐ அமுல்படுத்த நடவடிக்கை ; யாழில் ஜனாதிபதி உறுதிமொழி!

0
139
Article Top Ad

13வது திருத்தச் சட்டம் மிக விரைவில் அமுல்ப்படுத்தப்படும், ஆனால் முழுமையாக அமுல்ப்படுத்தப்படாது, அது உடனடி சாத்தியமில்லை..
13ம் திருத்தச் சட்டத்தை மிக விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

இது வடக்கு மக்களுக்கான பிரச்சினை மாத்திரமல்ல இலங்கையில் உள்ள அனைவரும் கோருகின்றார்கள் இதை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதற்காக அதை உடனடியாக முழுமையாக நடைமுறைபடுத்தி விட முடியாது குறிப்பாக தமிழ், முஸ்லிம் மலையக மக்களுக்கு உள்ள பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு நான் முயற்சிக்கின்றேன் அதற்காக கட்சித் தலைவர்களை சந்திப்பதற்கு விரும்புகின்றேன்.

கட்டங்கட்டமாக அந்த 13வது திருத்த சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்ததுதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

அதேபோல காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை தொடர்பில் விசேடமாக காணாமல் ஆக்கப்பட்டதற்கு என்ன நடந்தது என்பதன் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்

அதற்குரிய வேலை திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.