தமிழ்க் கட்சிகளின் சிதறல் தமிழ் மக்களுக்கே பாதிப்பு – பிரதமர் தினேஷ் கூறுகின்றார்

0
108
Article Top Ad

“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆசனங்களுக்கு ஆசைப்பட்டு தமிழ்க் கட்சிகள் பிளவடைந்து பல குழுக்களாகப் போட்டியிட முடிவெடுத்துள்ளன. இது தமிழ் மக்களுக்கே ஆபத்தாக மாறும். அவர்களின் வாக்குகள் சிதறுண்டு உண்மையான பிரதிநிதித்துவத்தை அடையாளம் காண முடியாத நிலை ஏற்படும்.”

– இவ்வாறு பிரதமரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று வடக்கின் தேர்தல் நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறின

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பிரதான கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன.

ஆனால், தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல தமிழ்க் கட்சிகள் சிதறித் தேர்தலைச் சந்திக்க முடிவெடுத்துள்ளன.

இது தமிழ் மக்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்தும். அவர்களின் வாக்குகளுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

தெற்கின் நிலைமை வேறு வடக்கின் நிலைமை வேறு. இதைத் தமிழ்க் கட்சிகள் உணர்ந்திருக்கவேண்டும்” – என்றார்