13ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஜெயசங்கர் இலங்கை அரசாங்கத்துக்கு வலியுறுத்து!

0
120
Article Top Ad

13ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் கடனை தாமதமின்றி மறுசீரமைப்பதற்கு தேவையான உத்தரவாதத்தை சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், கொழும்பில் நடைபெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

எரிசக்தி துறையில் முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும், அதற்காக இலங்கையில் வர்த்தகத்திற்கு சாதகமான சூழல் உருவாகும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரிவர்த்தனைகள் இந்திய ரூபாவின் மூலம் மேற்கொள்வது நல்ல போக்கு என அவர் அங்கு தெரிவித்ததுடன், 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வு தொடர்பிலான கலந்துரையாடல்கள் மிகவும் முக்கியமானவை எனவும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.