இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்தலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அகில இலங்கை மாகாண சபை உறுப்பினர் மன்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் செல்வாக்கு காரணமாக மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த வாய்ப்புள்ளதால், அதற்கு தயாராகுமாறு அக்கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு அவர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜூலை 21ஆம் திகதி சந்திக்கவுள்ளதாகவும், மாகாண சபைத் தேர்தலை அங்கு நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.