ஜனாதிபதி தலைமையில் ஆளுங்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு!

0
72
Article Top Ad

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கான விசேட கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று 14ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

பிரதமர் அலுவலகம் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இவ்வாறான கூட்டமொன்றை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் பலரும் கூட்டத்தை புறக்கணிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

பொதுஜன பெரமுன தரப்பில் இருந்து உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்காமல் அரசாங்க தரப்பிலிருந்து தனித்தனியாக இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டமையே கலந்துகொள்ளாமைக்கு காரணமென பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் கூறியுள்ளனர்.

நாமல் ராஜபக்ஷ எம்.பியும் தனித்தனியாக அழைப்பதை விடுத்து கட்சியாக அழைப்பதே பொருத்தமானது என சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் குறிப்பிட்டியுள்ளார்.

அத்துடன், இதற்கு முன்னரும் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அந்த கூட்டத்தையும் பொதுஜன பெரமுனவினர் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.