பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளர்கள் உள்ளனர்!

0
69
Article Top Ad

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் இருப்பதாகவும், தேர்தலுக்கான வேட்புமனுக்கள் சமர்பிக்கப்படும் போது கட்சியின் வேட்பாளர் பெயரிடப்படும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படவுள்ளது. இதற்க்கு இன்னும் ஒரு வருடத்திற்கு மேலான காலம் இருப்பதால், வேட்பாளரை நியமிப்பதற்கு அவசரம் இல்லை. அந்த நேரத்தில் நாட்டுக்கு தேவையான வேட்பாளரை நாம் களமிறக்குவோம்.

இந்த தருணத்தில் பொருளாதார மேம்பாடே மிக முக்கியமானதாக இருந்தால், அதனை முகாமைத்துவம் செய்யும் வகையில் பொதுஜன பெரமுனவுக்கு மிகவும் திறமையான வேட்பாளர்கள் உள்ளனர்என்றும் அவர் கூறியுள்ளார்.