இரா.சம்பந்தனுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

0
73
Article Top Ad

பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்பாக இதன்போது உரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கவலைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்பான விரிவான உரையாடல் இடம்பெற்றதாக அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.