ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர மிலேச்சத்தனமாக கைது

0
138
Article Top Ad

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பு, பொரளையில் நடத்திய ஆரப்பாட்டத்தில் காணொளிகளை பதிவுசெய்துக்கொண்டிருந்த போதே ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரது கைதுக்கான காரணத்தை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

கைது செய்யப்படும்போது இவரை பொலிஸார் தலையில் தாக்கியுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டு பொரளை பொலிஸில் வைக்கப்பட்டுள்ள இவரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் பார்வையிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலரை பொலிஸார் கைதுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.