அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை எதிர்வரும் அமர்வில் ஆற்றவுள்ளதாக அறிய முடிகிறது.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து கடந்தவாரம் சர்வக்கட்சி மாநாடொன்றை ஜனாதிபதி நடத்தியிருந்தார்.
இதன்போது பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அதிகாரங்களை அமுல்படுத்த ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டிருந்தார்.
என்றாலும், ஜனாதிபதியின் இந்த கருத்துகளை தமிழ் கட்சிகள் நிராகரித்திருந்தன.
இன்றைய தினம் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் மற்றும் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்ற இந்தியாவின் நிலைபாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையென உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே உறுதியளித்துள்ளார்.