“அமைச்சுப் பதவிகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து பாதுகாக்க வேண்டும்.”
– இவ்வாறு முடிவு எடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பஸில் ராஜபக்ச.
மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் பஸிலுக்கும் இடையில் இறுதியாக நடைபெற்ற சந்திப்பிலேயே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அறியமுடிகின்றது.
மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்கள் 10 பேருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்காமல் ஜனாதிபதி இழுத்தடித்து வருகின்றார். இதனால் மொட்டுக் கட்சியினர் ரணிலுடன் மனஸ்தாபப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எனினும், அமைச்சுப் பதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ரணிலை ஜனாதிபதிப் பதவியில் இருந்து பாதுகாப்பதன் மூலம்தான் மொட்டுக் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை இருப்பதால் பஸில் மேற்படி முடிவை எடுத்துள்ளார் என்று அறியமுடிகின்றது