Somalia's athletics federation chairwoman was suspended after an untrained female sprinter took more than 21 seconds to complete the 100 meters at the World University Games https://t.co/uB1Q6pFkym pic.twitter.com/EWuOurkxql
— Reuters (@Reuters) August 4, 2023
சீனாவின் செங்டுவில் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சோமாலிய வீராங்கனை ஒருவர் தனது மோசமான ஓட்டப் பெறுதியை வெளிப்படுத்தினார்.
சோமாலியாவைச் சேர்ந்த 20 வயதான நஸ்ரா அபுகர் அலி, 100 மீட்டர் ஹீட் ஓட்டத்தை 21.81 வினாடிகளில் ஓடி முடித்தார். அவரது ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் உடற்தகுதி நிலை மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடக்கூடியதாக இல்லை.
நஸ்ரா அபுகர் அலி, வெற்றி பெற்ற வீராங்கனையை விட பத்து வினாடி100 மீட்டர் ஓடியது. அவரது தேர்வு குறித்த கேள்விகளையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக வந்த வீராங்கனையின் வீடியோவை ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ வைரலானது. அந்த வீராங்கனை சரியாக பயிற்சி பெறாததுபோல் தோன்றியது. வீடியோவைப் பார்த்த பலரும் சோமாலியாவின் தடகள அமைப்பை கேலி செய்யத் தொடங்கினர்.
இந்த புதிய ஓட்டப்பந்தய வீராங்கனையை சீனாவில் நடக்கும் போட்டிக்கு அனுப்பியதன் பின்னணி குறித்து பல பயனர்கள் கேள்வி எழுப்பினர். அந்த வீராங்கனை தடகள போட்டியின் வரலாற்றில் மிக மெதுவாக ஓடியதற்கான சாதனையை படைத்துள்ளார் என்றும் சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்ற மோசமான வீராங்கனை என்றும் விமர்சனம் செய்தனர்.
இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்த எல்ஹாம் கராட் என்ற பயனர், சோமாலிய அதிகாரிகளை வாரிசு ஆதிக்கம் என்று குற்றம் சாட்டினார். ‘அது சோமாலி தடகள சம்மேளன தலைவரின் மருமகள். அவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? இது வாரிசு ஆதிக்கம்.
Somalia’s sports minister has apologised after a video of an ‘untrained’ Somali runner jogging down the track for a 100m race at an international competition went viral.
One of Somalia’s top athletics bosses has been suspended for ‘nepotism’ 👇 pic.twitter.com/oBtEH1yfJq
— AJE Sport (@AJE_Sport) August 3, 2023
சோமாலியாவில் எங்களிடம் சிறந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர். ஆனால் பணம் என்று வரும்போது அது வேறு கதை’ என்று ட்வீட் செய்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சோமாலி தடகள கூட்டமைப்பின் தலைவர் காதிஜோ அடன் தாஹிரை சோமாலியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் பதவியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்தது.