உலக புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் யோஹானியின் படம்

0
111
Article Top Ad

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் இலங்கை பாடகி யோஹானியின் படம் இடம்பெற்றுள்ளது.

தெற்காசிய பாரம்பரிய மாதத்தின் ஒரு பகுதியாக டைம்ஸ் சதுக்கத்தில் யோஹானியின் படம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

“உலகம் முழுவதும் இலங்கையின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரிதிநிதித்துவப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். எனது இசை பயணத்தின் அடுத்த நகர்வாக அமெரிக்க இசைத் துறையுடன் இணைந்து பயணிப்பதற்கு வாய்ப்பளித்த @spotifylk இற்கு நன்றி.

எமது கலாச்சாரம் மற்றும் எமது நாட்டின் இசை மேற்குலக நாடுகளில் கொண்டாடப்படுவதை பார்ப்பதற்கு மிகவும மகிழ்ச்சியாக உள்ளது” என யோஹானி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.