உலகெங்கம் திரையிடப்பட்ட இடங்களிலெல்லாம் வசூலை வாரிக்குவிக்கும் ஜெயிலர் !

எப்படிப் பார்த்தாலும் தர்பார் மற்றும் அண்ணாத்த படங்களில் அடைந்த வீழ்ச்சியை ஜெயிலர் மூலம் தலைவர் ரஜனிகாந்த் சரிசெய்து மீண்டும் வசூல் ராஜா என்பதை நிலைநிறுத்திக்கொண்டுள்ளதாக அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டாடி வருகின்றனர்.

0
131
Article Top Ad

சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் உலகெங்கும் திரையிடப்பட்ட இடங்களிலெல்லாம் சக்கைபோடு போட்டு வசூலை வாரிக்குவித்துவருவதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் நாள் வசூல் இந்திய நாணய மதிப்பின் படி 100 கோடி ரூபாவைத் தாண்டும் என திரைத்துறை தகவல்களைத்தர வல்லவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முதல் நாள் வசூல் விவரங்கள்

தமிழ் நாடு – ₹ 29.46 cr

ஆந்திர பிரதேஷ் & தெலுங்கானா – ₹ 12.04 cr

கர்நாடக – ₹ 11.92 cr

கேரளா – ₹ 5.38 cr

வடமாநிலங்கள் – ₹ 4.23 cr

ஓவர்சீஸ் – ₹ 32.75 cr

முதல் நாளில் முடிவில் சூப்பர்ஸ்டார் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம், மொத்தம் 95.78 கோடி வசூல் செய்திருக்கிறது.

அமெரிக்காவில் மாத்திரம் இரண்டு தசம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வசூலை அதற்குள்ளாகவே ஜெயிலர் குவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எப்படிப் பார்த்தாலும் தர்பார் மற்றும் அண்ணாத்த படங்களில் அடைந்த வீழ்ச்சியை ஜெயிலர் மூலம் தலைவர் ரஜனிகாந்த் சரிசெய்து மீண்டும் வசூல் ராஜா என்பதை நிலைநிறுத்திக்கொண்டுள்ளதாக அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டாடி வருகின்றனர்.

ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் திகதி உலகெங்கும் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தனது குடும்பத்தோடு அமைதியாக வாழ்ந்து வருகிறார், இந்நிலையில் போலீஸ் அதிகாரியான தனது மகனை சிலர் கடத்தியுள்ளனர் என்று அறியும் நாயகன் ரஜினி, எலி போல தனது ஓய்வு காலத்தில் வாழும் நாயகன் மீண்டும் புலியாக மாறி தனது குடும்பத்தை காப்பாற்றுவதே இந்த படத்தின் கதை.