சவுதி அல் நாஸர் கழகத்திற்கு முதல்முறையாக பெரும் பட்டத்தை வென்று கொடுத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

அரபு பிராந்தியத்திலுள்ள சவுதி அரேபியா ,கட்டார் ,மொராக்கோ ,ஐக்கிய அரபு இராச்சியம், ஈராக், துனிசியா, அல்ஜீரியா ஆகிய நாடுகளின் முன்னணி கால்பந்தாட்ட கழகங்கள் பங்கேற்ற இம்முறை அரபு கழக கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு சவுதி அரேபியாவைச் சேர்ந்த பரம வைரிகளான அல் ஹிலால் மற்றும் அல் நாஸர் கழகங்கள் தகுதிபெற்றிருந்தன.

0
134
Article Top Ad

கிண்ணங்களாலும் சாதனைகளாலும் நிறைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்வில் மற்றுமொரு மறக்கமுடியாத நாளாக சனிக்கிழமை அமைந்தது.

சவுதி அரேபியாவின் அல் நாஸர் கழகத்திற்காக கழக மட்டப் போட்டிகளில் விளையாடிவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ அந்தக்கழகத்தின் வரலாற்றில் முதற்தடவையாக Arab Club Champions Cup அரபு கழக சம்பியன்ஷிப் போட்டியில் சம்பியன் பட்டத்தை வெல்ல வழிகோலியுள்ளார்.

அரபு பிராந்தியத்திலுள்ள சவுதி அரேபியா ,கட்டார் ,மொராக்கோ ,ஐக்கிய அரபு இராச்சியம், ஈராக், துனிசியா, அல்ஜீரியா ஆகிய நாடுகளின் முன்னணி கால்பந்தாட்ட கழகங்கள் பங்கேற்ற இம்முறை அரபு கழக கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு சவுதி அரேபியாவைச் சேர்ந்த பரம வைரிகளான அல் ஹிலால் மற்றும் அல் நாஸர் கழகங்கள் தகுதிபெற்றிருந்தன.

ரொனால்டோ உட்பட பல நட்சத்திர வீரர்களால் நிறைந்த அல் நாஸர் கழகத்திற்கு இறுதிப் போட்டியின் முதற்பாதியில் கோல் போடுவதற்கான பல வாய்ப்புக்கள் இருந்தபோதும் அது வாய்க்கவில்லை. எனினும் போட்டியின் இரண்டாவது பாதியில் பிரேசில் வீரர் மைக்கல் அலாதியான கோலை 51 வது நிமிடத்தில் அடித்து அணியை முன்னிறுத்தினார்.

கோலை அடித்த பின்னர் ரொனால்டோ போன்று வெற்றிக்களிப்பை வெளிப்படுத்திய நிலையில் வீறு கொண்டெழுந்த ரொனால்டோ போட்டியின் 74வது நிமிடத்தில் கோல் அடித்து கோல் எண்ணிக்கையை சமன்செய்தார். இதன் பின்னர் போட்டியின் மேலதீக நேரத்தில் மற்றுமொரு கோலை அலாதியாக அடித்த ரொனால்டோ வெற்றியை உறுதிசெய்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் சவுதி அரேபியாவின் அல் நாஸர் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட ரொனால்டோ எந்த கிண்ணத்தையும் வெல்லவில்லை. ஆனால் தற்போது மீண்டுமாக கிண்ணம் வென்று தனது தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.