இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் அபாயம் : எச்சரிக்கை விடுத்துள்ள அவுஸ்திரேலியா

0
108
Article Top Ad

அவுஸ்திரேலியா இலங்கைக்கான பயண ஆலோசனைகளை மீளாய்வு செய்துள்ளது மற்றும் பொது ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை பரிந்துரைசெய்துள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கான தனது ஆலோசனையை மீளாய்வு செய்ததாகவும் ஆனால் ஆலோசனையின் மட்டத்தை மாற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

“இலங்கைக்கான எங்கள் ஆலோசனையை நாங்கள் மதிப்பாய்வு செய்துள்ளோம். எங்கள் ஆலோசனையின் அளவை நாங்கள் மாற்றவில்லை, அதிக எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

பொது ஆர்ப்பாட்டங்கள் இலங்கை முழுவதும் ஏற்படக்கூடும் என்பதுடம் வன்முறையாக மாறலாம்.

ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்க்கவும். இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் சில உணவுகள் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது” என அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது பயண எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தும், பொது அவசரநிலைகள் அறிவிக்கப்படலாம். ஊரடங்குச் சட்டம் விதிக்கப்படலாம் என்று பயண ஆலோசனையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல் அபாயம் இருப்பதாகவும், வெளிநாட்டவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் பகுதிகளை பயங்கரவாதிகள் குறிவைக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

“எப்பொழுதும் பயண மற்றும் அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள். குறிப்பாக விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ள கூடுதல் நேரத்தை அனுமதிக்கவும்” என்று அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

கடன் அட்டை மோசடி, அதிக கட்டணம் மற்றும் போலி பொருட்கள் உள்ளிட்ட மோசடிகள் பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் மற்றும் கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் நிகழலாம் என்றும் ஆலோசனை வலியுறுத்தப்பட்டுள்ளது.