ஆஸி., ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் அமுல் ; கடும் கோபத்தில் சீனா!

0
77
Article Top Ad

ஆசிய நாடுகளுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளதால் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் தற்போது ஜப்பானில் செயற்படக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான பரஸ்பர அணுகல் ஒப்பந்தம் (RAA) நேற்று முறைப்படி நடைமுறைக்கு வந்தது.

பயிற்சி மற்றும் பிற இராணுவ நோக்கங்களுக்காக இரு நாடுகளின் படையினரும், இரு நாடுகளுக்கு நுழைவதற்கும் ,நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கும் இவ்வொப்பந்தம் வழிவகுக்கின்றது.

குறித்த ஒப்பந்தம் இரு ஆயுதப் படைகளுக்கும் இடையே பயிற்சிகளுக்கு வழி வகுக்கும் என்று ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

பாரிய இராணுவ பயிற்சிக்காக ஆஸ்திரேலியா விமானப்படை அடுத்த மாதம் ஜப்பான் செல்கின்றது.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் விவாதத்தில் RAA ஒப்பந்தம் 2022 ஜனவரியில் கைச்சாத்திடப்பட்டது.

ஜப்பானும், ஆஸ்திரேலியாவில் 2007 இல் முதல் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதில் இருந்து சீனா தனது வரவு – செலவுத் திட்டத்தில் இராணுவத்துக்கான ஒதுக்கீட்டை நான்கு மடங்காக அதிகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.