மகளிர் உலகக்கிண்ண இறுதியாட்டத்திற்கு முதன்முறையாக தகுதி பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளது இங்கிலாந்து அணி. இன்றையதினம் சிட்னியில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் போட்டிகளை நடாத்தும் இணைநாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்து இந்த வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது இங்கிலாந்து.
OUR @LIONESSES ARE #FIFAWWC FINALISTS FOR THE VERY FIRST TIME! 🏴pic.twitter.com/CgBkjW0phM
— England (@England) August 16, 2023
போட்டி ஆரம்பித்து 36வது நிமிடத்தில் Ella Toone முதலாவது கோலைப் இங்கிலாந்திற்காக பதிவுசெய்தார். அதன் பின்னர் 63வது நிமிடத்தில் Samantha Kerr அவுஸ்திரேலியாவிற்கு கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். பின்னர் 71நிமிடத்தில் Lauren Hemp அலாதியான கோலை அடித்த இங்கிலாந்தை முன்னிலையில் நிறுத்தினார். இதன் பின்னர் 86வது நிமிடத்தில் Alessia Russo கோல் அடித்து வெற்றியை உறுதிசெய்தார். இந்தவகையில் 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.
İngiltere'de finale çıkmanın coşkusu. #FIFAWWC pic.twitter.com/lyNjA4t0oP
— Socrates (@SocratesDergi) August 16, 2023
1966ஆம் ஆண்டில் இங்கிலாந்து ஆடவர் கால்ப்பந்தாட்ட அணி உலகக்கிண்ணத்தை வென்ற பின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை மகளிர் அணி பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.