தாய்வான் துணை ஜனாதிபதி வில்லியம் லாய் அண்மையில் பராகுவே நாட்டுக்கான பயணத்தை முடித்துவிட்டு திரும்பும் வழியில் அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ மற்றும் நியூயோர்க்கிற்கு மாநிலங்களுக்கு விஜயம் செய்தார்.
இதன் காரணமாக தாய்வானுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சனிக்கிழமை தாய்வானை சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா இராணுவ பயிற்சி ஒத்திகைகளை ஆரம்பித்துள்ளது.
பிரிவினைவாதிகள் மற்றும் வெளிநாட்டு சக்திகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பதிலடி வழங்கும் வகையில் இந்த இராணுவ ஒத்திகையை மேற்கொண்டுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்வான் விவகாரத்தில் அமெரிக்கா நெருப்புடன் விளையாடுகிறது-சீனா எச்சரிக்கை
தாய்வான் அருகில் உள்ள கடற்பரப்பில் போர் விமானங்கள் மற்றும் கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன. வீடியோவும் வெளியாகியுள்ளது.
தாய்வானை முழு சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, துணை ஜனாதிபதி வில்லியம் லாய் அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் சென் பிரான்சிஸ்கோவிற்கு மாநிலங்களுக்கு விஜயம் செய்தார்.
தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என கூறும் சீனா, வில்லியம் லாயின் அமெரிக்க விஜயத்திற்கு எதிரான எச்சரிக்கையாக இராணுவ ஒத்திகைகளை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் தனது வான் பரப்பில் சீன போர் விமானங்கள் பிரவேசித்தையிட்டு தாய்வான் கோபமடைந்துள்ளது.
சனிக்கிழமை காலை முதல் சீனாவின் பல போர் விமானங்கள் தாய்வானின் வான்பரப்பில் பிரவேசித்ததாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்வான் நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க எதனையும் செய்ய தயாராக இருப்பதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.