தமிழ்த் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து! – நாடாளுமன்றில் கஜேந்திரன் எச்சரிக்கை

0
111
Article Top Ad

 

தமிழ்த் தலைவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“எமது கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டைச் சுற்றிவளைக்கப் போவதாக உதய கம்மன்பில பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். அச்சுறுத்தும் வகையில் இந்த அழைப்பு உள்ளது.

இவ்வாறாகத் தமிழ்த் தலைவர்களின் உயிருக்கு நீங்கள் ஆபத்தை ஏற்படுத்த முயல்கின்றீர்களா? என்ற கேள்விகள் எழுகின்றன. இதனால் இவ்வாறான இனவாதச் செயற்பாடுகள் மூலமாக குருந்துர்மலை போன்ற இடங்களில் தமிழர்களின் வரலாறுகளை மாற்றியமைக்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நாவற்குழி, தையிட்டி, குருந்தூர் விகாரைகள் அகற்றப்பட வேண்டும். தொல்பொருள் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.” –  என்றார்.