மதிவதனியும் துவாரகாவும் உயிருடன் இல்லை

0
130
Article Top Ad

துப்பாக்கியில் இறுதித் தோட்டா முடியும் வரைக்கும் போரிட்டுக் குடும்பத்துடன் மடிந்தவர்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன். புலம்பெயர் தமிழர்கள் அவரையும், அவரது குடும்பத்தினரையும் வைத்து பிழைப்பு நடத்துகின்றனர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரால் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“பிரபாகரனோ அல்லது அவரின் குடும்பத்தில் எவரும் இன்று உயிருடன் இல்லை என்பதே உண்மை. இறுதிப் போரில் பங்கெடுத்த படைத் தளபதிகளில் ஒருவன் என்ற ரீதியில் இந்த உண்மையை மீண்டுமொரு தடவை ஞாபகப்படுத்துகிறேன்.

இறுதி யுத்தத்தில் இறுதி வரைக்கும் போரிட்டு தன் குடும்பத்துடன் மாண்டவர்தான் பிரபாகரன். அவர் பயங்கரவாத அமைப்பின் தலைவர். ஆனால், அவர் தனது கொள்கையில் இறுதி வரைக்கும் மாறாமல் நின்ற ஒரு தலைவர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மனைவியான மதிவதனி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாகவும் மிக அண்மையில் குறித்த இருவரையும் சந்தித்ததாகவும், அவர்களுடன் உணவு உண்டதாகவும் புலம்பெயர் நாட்டில் வசிக்கும் மதிவதனியின் சகோதரி தெரிவித்திருந்தார்.

இந்த காணொளி வலுக்கட்டாயமாக ஒரு தரப்பால் எடுக்கப்பட்டுள்ளது.

அதில் பிரபாகரனின் மனைவி மதிவதனி தொடர்பிலும், அவரின் மகள் துவாரகா பற்றியும் அந்தப் பெண் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பொய்யானவை” என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரால் கமல் குணரத்ன தெரிவித்தார்.