ஆசியக் கிண்ண தொடரின் நேபாளம் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் முல்தானில் இடம்பெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியினர் 238 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 342 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணித் தலைவர் பாபர் அசாம் 151 ஓட்டங்களையும், இப்திகார் அஹமட் ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மொகமட் ரிஷ்வான் 44 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பந்து வீச்சில் நேபாளம் அணி சார்பில் சோம்பால் கமி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
343 என்ற வெற்றி இலக்கை நேக்கி துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 23.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது.
நேபாளம் அணி சார்பில் சோம்பால் கமி அதிகப்பட்சமாக 28 ஓட்டங்களை பெற்றிருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஷதாப் கான் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக பாபர் அசாம் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியுடன் பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டு புள்ளிகளுடன் முதல் இடம்பிடித்துள்ளது.