இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜதந்திரி ரணிலுடன் சந்திப்பு

0
101
Article Top Ad

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் (Chris Van Hollen) இன்று (30) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் இருநாட்டு பொருளாதார உறவுகள் மற்றும் பாதுகாப்பது ஒத்துழைப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.