பிரான்சில் அதிகரிக்கும் பணவீக்கம் – உணவுக்கு போராடும் மக்கள்

0
83
Article Top Ad

பிரான்ஸில் வசிக்கும் மூன்றில் ஒரு பகுதியினர் நாளொன்றுக்கு மூன்று வேளை உணவை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன், உணவு மற்றும் மருத்துவ செலவுகள் போன்ற தேவைகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘மக்கள் நிவாரணம்’ எனும் உதவி அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 16 வயதுக்கு மேற்பட்ட 996 பேரிடமிருந்து தொலைபேசி ஊடாக தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பிரான்ஸில் 32 வீதமான மக்கள் நாளொன்றுக்கு மூன்று வேலை உணவை தயாரிப்பதற்கு போதுமான உணவுப் பொருட்கள் அல்லது ஆரோக்கியமான உணவை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவுத் தேவையினை பூர்த்தி செய்வதற்கு சிரமப்படும் பெரும்பாலானவர்கள் முதலில் தங்களின் இறைச்சி நுகர்வை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 72 வீதமானவர்கள் எப்போதாவது இறைச்சியை உணவாக எடுத்துக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

43 வீதத்திற்கும் குறைவானவர்கள் தினசரி பழங்கள் மற்றும் மரக்கறிகளை உற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் விலை அதிகரிப்பு பிரான்ஸில் அதிகமான மக்களை வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளியுள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உணவுப் பொருட்களின் விலையினை குறைக்குமாறு பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றார்.

விநியோகத்தர்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து 5,000 பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் என அவர் உறுதியளித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.