அமெரிக்கா, கியூபாவுக்கு ஜனாதிபதி பயணம்

0
76
Article Top Ad

நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3.15 மணியளவில் ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை குழுவினர் புறப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டம் 78இன் போது, இளம் தலைவர்கள் உட்பட உலகத் தலைவர்கள், உலகளாவிய பாலிக்ரிசிஸை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி விவாதிப்பார்கள்.

மேலும், நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலில் நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கான உத்திகளைக் கண்டுபிடிப்பார்கள்.

நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச் சபையில் கலந்துகொள்வதற்கு முன்னர், ஜனாதிபதி விக்கிரமசிங்க, G77 + சீனத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக கியூபாவிற்கு விஜயம் செய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.