புலம்பெயர் நாடுகளில் வேலையில்லாமல் திண்டாடும் இலங்கை புத்திஜீவிகள்

0
63
Article Top Ad

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ள அதிகளவான புத்திஜீவிகள் உணவகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பணிபுரிவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் பொறியாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் கணக்காளர்களும் இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர்களின் தொழிலுக்கு ஏற்ற வேலை கிடைக்காததே இந்த நிலைமைக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பல வைத்திய நிபுணர்கள் வெளிநாடுகளில் அந்த துறை தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பொருளாதார நிலை காரணமாக ஏற்பட்ட நெருக்கடிகளை போக்குவதற்காக கடந்த காலங்களில் பலர் வெளிநாடுகளுக்கு சென்றனர்.

இதேவேளை, இலங்கையில் உள்ள 50,000க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் வல்லுநர்கள் தற்போது வெளிநாடு சென்றுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் தொற்று பரவிய பிறகு வெளிநாடுகளுக்கு தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட பெருமளவிலான வைத்திய நிபுணர்கள் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.