மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டு பிரதான சூத்திரதாரிகள் என முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கடும் வாக்குவாதத்தின் போதே சரத் பொன்சேகா இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்.
முன்னாள் இராணுவத் தளபதியால் தனது இராணுவதலைமையகத்தை கூட பாதுகாக்க முடியவில்லை என மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தை தொடர்ந்தே இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றியது.
சரத் பொன்சேகா தாக்கப்பட்டவேளை அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டன என சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள சரத் பொன்சேகா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரிகள் இருவரில் ஒருவர் மைத்திரிபால சிறிசேன என தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தொடர்ந்தும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதில் இரண்டு தலைமறைவாக உள்ளனர். ஒருவர் அவர்.மற்றவர் கோத்தபாய. சன்னி ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மட்டுமே. முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்தபோது வெடிகுண்டு வெடித்தது. அவர் இலங்கைக்கு வராமல் ஹோட்டலில் பதுங்கியிருந்தார்.
இதுகுறித்து பாராளுமன்றக் குழுவில் கேள்வி எழுப்பினேன். அவர் என்ன சொன்னார்? விமானத்தில் இருக்கைகள் இல்லை என்று கூறினர். பொய் சொல்லிவிட்டு இரவில் எல்லோரும் உறங்கிய பின்னர் நாட்டுக்கு வந்திருந்தார்.
இப்படி ஒரு கோழை தலைவன் இதுவரை பிறந்ததில்லை. நாங்கள் மிகவும் வெட்கப்படுகிறோம் என்றார்.