பொதுஜன பெரமுனவினவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க அரசாங்கம் ரகசிய நகர்வு

0
108
Article Top Ad

2023ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறார்.

பொதுஜன பெரமுன மாவட்ட தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை அதற்கு சாதகமான பதிலை ஜனாதிபதி வழங்கவில்லை.

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.

இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்டர்கள் கடந்த காலங்களில் ஊடகங்கள் முன் விரக்தியை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.

எவ்வாறாயினும், அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்தினால் அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படும் என்பதால், அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.