பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஆப்கானிஸ்தான்;தொடர் தோல்வியை சந்திக்கும் ஜாம்பவான் அணிகள்

0
70
Article Top Ad

“2023“ உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லாதுள்ளது.

எதிர்பாதார பல தோல்விகளை ஜாம்பவான் அணிகள் சந்தித்து வருகின்றன.

இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் புதிய வரலாறு படைத்துள்ளது.

இம்முறை உலகக்கிண்ணத்தை வெற்றிக்கொள்ளும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் அணி கணிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் பாகிஸ்தான் அணி எதிர்பாராத தோல்விகளை சந்தித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தோல்வியை சந்தித்துள்ளதால் அரையிறுதி போட்டிக்குள் நுழைவதற்கு அடுத்துவரும் போட்டிகளில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணிசார்பில் துடுப்பாட்டத்தில் பாபர் அசாம் 74 ஓட்டங்களை பெற்றதுடன் அப்துல்லா ஷபிக்யூ 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நூர் ஹகமட் 3 விக்கெட்டுக்களையும், நவீன் உல் அக் 2 விக்கெட்டுக்களையும் மொஹமட் நபி, ஒமர்சாய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

283 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரமஹதுல்லா குருபா 65 ஓட்டங்களையும், இப்ராஹிம் 87 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

ஆட்டமிழக்காமல் துடுப்பாடிய ரஹமட் சாஹத் 77 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஷஹின்டி 48 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய ஜாம்பவான் அணிகளை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது. 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

இதேவேளை, “2023“ உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 15ஆவது லீக் ஆட்டத்தில் பலமான தென்னாப்பிரிக்கா அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.