2024ஆம் ஆண்டில் தேர்தல்களை நடத்த 30 பில்லியன் ரூபா செலவாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரசியலமைப்பு பேரவை இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கான அனைத்து உறுப்பினர்களையும் நியமிக்கவில்லை எனவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.
‘‘ஐந்து உறுப்பினர்களில் நான்கு பேர் மட்டுமே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேரின் அனுமதி இருந்தால் பணிகளை முன்னெடுக்க முடியும். அதன் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தங்கள் கடமைகளையும் செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதுள்ள தேர்தல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை ஆராய்வது மற்றும் மாற்றங்களை பரிந்துரைப்பது போன்ற விவாதங்களுக்கு தேர்தல்கள் மறுசீரமைப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழுவை இன்னமும் அணுகவில்லை.
தேர்தல் சட்டத்தில் மாற்றங்கள் குறித்து ஆணைக்குழு சில வருடங்களுக்கு முன்னர் பொதுமக்களின் கருத்தை கோரியிருந்தது.
ஜனாதிபதி தேர்தல், பொது தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வைப்புத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும். இதை ஏற்கனவே நாங்கள் முன்மொழிந்துள்ளோம். இதற்கான சட்டத்தை இயற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல், மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு திறைசேரியிடம் கோரியுள்ளோம்.
இலங்கையில் திட்டமிடப்பட்ட தேர்தல்கள் எதுவும் இல்லை. பல வருடங்களாக மாகாண சபைகள் நடத்தப்படவில்லை, ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம்.
எனவே கடந்த சில வருடங்களாக, வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் போது, மதிப்பீட்டை வழங்குமாறு திறைசேரியால் எங்களிடம் கேட்கப்பட்டபோது, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் எப்போதும் நிதியைக் கேட்கிறோம். இந்தத் தேர்தல்களுக்காக 30 பில்லியன் ரூபாவை கோரியுள்ளோம்.
பொதுத் தேர்தலுக்கு 11 பில்லியன் ரூபா செலவாகும் என திறைசேரிக்கு தெரிவித்துள்ளோம். ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தால், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிதியை வழங்குவதற்கு அரசியலமைப்பு ரீதியாக கட்டுப்பட்டவர்.” என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க