அமெரிக்க ஜனாதிபதி Joe Biden மற்றும் சீன ஜனாதிபதி Xi Jinping ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்கும் வகையில் சீன ஜனாதிபதி Xi Jinping அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமரிக்கா மற்றும் சீனா இடையிலான அதிகார போராட்டத்தின் பின்னணியில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
தாய்வான் பொருளாதாரத் தடைகள் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு தீர்வுகாணும் வகையில் சுமார் மூன்று மணிநேரம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமேரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவை மேம்படுத்த விரும்புவதாக இரு நாட்டு ஜனாதிபதிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், தாய்வானில் இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் சீனா தலையிட வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி சீனாவை கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இஸ்ரேல் மற்றும் உக்ரேன் போர் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
06 வருடங்களின் பின்னர் சீன ஜனாதிபதி அமெரிக்கவுக்கு விஜயம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பமாக இது அமைகின்றது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.