Article Top Ad
உடன் அமுலாகும் வகையில் மனிதாபிமான போர் நிறுத்தம், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நிறைவேற்றியுள்ளது.
193 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 153 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உட்பட பத்து நாடுகள் எதிராக வாக்களித்துள்ள நிலையில் 23 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் உட்பட சர்வதேச சட்டத்தின் கீழ் தமது கடமைகளுக்கு இணங்க வேண்டுமெனும் பொதுச்சபையின் கோரிக்கைக்கையை இந்த தீர்மானம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.