பிரதித் தலைவர் பதவி : சஜித் – டலஸ் இடையே முறுகல்

0
101
Article Top Ad

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைக்க எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயல்படும் எம்.பிகள் இணைந்து உருவாக்கியுள்ள சுதந்திர மக்கள் சபையை ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைத்துக்கொள்ள பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

உருவாக்கப்படும் புதிய கூட்டணியில் டலஸ் அழகப்பெருமவுக்கு பிரதி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென்ற நிபந்தனையை ஒருசிலர் இந்த பேச்சுவார்த்தைகளில் முன்வைத்துன்னர்.

என்றாலும், குறித்த நிபந்தனையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார். பிரதி தலைவராக நியமிக்கப்படுபவருக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டுமென்பது பொதுவான கருத்தாக உள்ளதால் சஜித் பிரேமதாச இந்த நிபந்தனையை நிராகரித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, சரத் பொன்சேகா, ரஞ்ஜித் மத்தும பண்டார, ஹர்சடி சில்வா மற்றும் கூட்டணி கட்சிகளின் பலர் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வதற்கான நகர்வுகளில் ஈடுபட்டுள்ளதாலேயே சஜித் பிரேமதாச இந்த நிபந்தனையை நிராகரித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை தொடர்பிலும் இறுதிகட்ட முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.